Monday, April 12, 2010

சுனாமி



சுனாமியா நீ????என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என்னையும் கடத்தி செல்கிறாயே.....

கண்ணாடி

நான்  என்னை  முகக்கண்ணாடியில் பார்த்ததைவிட உன் கண்ணாடியில் பார்த்ததுதான் அதிகம்...

அலைவரிசை

மொபைல் நீ கம்ப்யூட்டர் நான் உன்னை யாரோ அழைத்தால் கூட நான் நடுங்குகிறேன் இருவரும் ஒரே அலைவரிசை என்பதனாலோ................

இலை

மரக்கிளையாய் நான் இருக்க என்னை விட்டு பிரிந்து உதிரும் இலையாய் நீ இருக்கிறாய்......

நினைவலை

                                             
                                              உன் நினைவலைகளில் சிக்கி தவிக்கும் சங்கு நான்...
என் ஓசையை காது கொடுத்து கேட்க உனக்கு நேரம் இல்லையா????

மழை நீர்

சில்லென்று வீசிய தென்றல் காற்று உணர்த்தியது நீ இல்லாத வெறுமையை  தலைகுனிந்து பூமியை பார்த்தேன்!!!
பூமியில் தேங்கியிருந்த தண்ணீர் சொன்னது நீண்ட நாள் பிரிந்திருந்து சேர்ந்த இனிமையை...

துடிப்பு

நீ என்னை கடக்கும் போதெல்லாம் என் இதயம் இரட்டிப்பாக துடிக்கிறது உன் இதயத்தையும் நான் சுமப்பதனாலோ....

பூட்டியிருக்கும் என் இதயம்



நான் அக்கவ்ன்ட்!!!என்னை லாக் செய்த பாஸ்‌வர்ட் நீ!!!
நீ இல்லாமல் நானே என்னை ஆக்ஸெஸ் செய்ய முடியவில்லையே!!!

இரயில்

இரயில் நீ தண்டவாளம் நான்!!!எத்தனை  முறை என்னை மிதித்து வேகமாய் கடந்து சென்றாலும் பொறுமையாய்காத்திருப்பேன் உனக்காக..

இருள்

                                                                             
                                                                          


அஸ்தமிக்கும் சூரியனுடன் வெளிச்சம் மறைந்து இருள்சூழ்கிறது...நீ என் பார்வையை விட்டு மறையும் போதெல்லாம் தனிமை இருள் என்னை சூழ்கிறது...

ஓளியும் ஒலியும்

ஒளியும் ஒலியும் இல்லாமல் இடி இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை....

நிஜம்

கனவிலும் உன் நினைவிலும் வாழ்ந்து வாழ்ந்து
நிஜத்தில் வாழ மறந்துவிட்டேன்....

இளைஞன்

நடை உடை பாவனையில் வெள்ளைக்காரன் தாய் நாட்டில் வேலை தேடும் பிச்சைக்காரன் இளைஞன்!!!!!!!!

இசை

 இசை கருவிகள் இன்றி ரம்மியமான இசை மீட்டும் கலைஞர்கள்

கடல் அலையும்,தென்றல் காற்றும்!!!!!

நிழல்

மனிதனுக்கு நிழல் தர மரத்திற்கு மனமுண்டு....

மரத்திற்கு இடம் தர மனிதனுக்கு மனமில்லை...

மலர்

தினமும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புன்னகைத்து கொண்டே இருக்கும் உன்னத படைப்பு மலர்.......

காதல்

இமைக்க மறந்த கண்களுக்கும் சிந்திக்க மறந்த சிந்தைக்கும் இதயம் சொல்லும் ஆறுதல் காதல்...

நட்பு

இதயத்தை போல துடித்துக் கொண்டே உயிருடன் கலந்திருந்து


கவலைகளை சலவை செய்யும் மாயை, நட்பு!!!!!

அம்மா

பத்து மாசம் கருவறையில்..


இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்

புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!

என் சகோதரி

உன்னை அச்சிட நினைத்திருக்கிறேன் பல முறை, தோல்விகள் மட்டுமே என் வசம்..

உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!

ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!

உனக்கு நிகர் யாரடி???

என்னை பெறாத தாயும் நீதானடி...

அப்பா

இருபது ஆண்டுகள் பாசத்தை உரமாகவும் வியர்வையை நீராகவும் ஊற்றி வளர்த்தாய்.... உன் பிரிவினில் உணர்ச்சியற்று மரமாய் வளர்ந்து நிற்கிறேன் அம்மாவிற்கு மட்டும் நிழலளிக்க.....